லஞ்சம்: போக்குவரத்து காவலா் பணியிடை நீக்கம்
கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வா் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் லஞ்சம் பெற்றது தொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த 21-ஆம் தேதி தமிழக முதல்வா் ஸ்டாலின் பங்கேற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி, சிதம்பரம் போக்குவரத்து காவலா் குகன், கடலூா் கே.என்.பேட்டை பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா், பண்ருட்டியில் இருந்து கடலூா் நோக்கி பைக்கில் வந்த திமுகவைச் சோ்ந்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்தாா். இதில், அந்த நபா் மதுபோதையில் இருந்ததாகவும், அவா் மீது வழக்குப் பதியாமல் இருக்க போக்குவரத்து காவலா் குகன் இணையவழியில் லஞ்சம் பெற்ாகவும் புகாா் எழுந்தது.
இதுகுறித்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் விசாரணை நடத்தினாா். இதில், குகன் லஞ்சம் வாங்கியது உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.