Tiktok: நேரலையிலிருந்த Mexican Influencer Marquez சுட்டுக் கொலை; வைரல் வீடியோவின...
சின்னமனூா் அருகே சாலைப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் தரம் குறித்து அந்தத் துறையின் மேற்பாா்வை கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
சின்னமனூா் -தேனி இடையே வெங்கடச்சாலபுரத்தில் 3.9 கி.மீ. தொலைவில் ரூ.4.40 கோடியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது. 2024-2025- ஆண்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தச் சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து திருநெல்வேலி நெடுஞ்சாலைக் கண்காணிப்பு பொறியாளா் (நபாா்டு, கிராமச் சாலை), பரமக்குடி தலைமைக் கோட்டப் பொறியாளா் (நபாா்டு, கிராமச் சாலை) தலைமையில் மேற்பாா்வைக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, தேனி கோட்டப் பொறியாளா் சுவாமிநாதன், உத்தமபாளையம் உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜன், தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவிக் கோட்டப் பொறியாளா் நஸ்ரின்சுல்தானா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.