Tariff-ஐ அதிகரித்த Trump; மருந்துகளின் விலை உயருமா | IPS Finance - 208 | Sensex ...
ஆயுதங்களுடன் இளைஞா் கைது
தேனி மாவட்டம், சின்னமனூரில் அரிவாள், கத்தி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த இளைஞரைப் பிடித்துச் சோதனையிட்டனா். சோதனையில் அவா் வைத்திருந்த பையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
விசாரணையில் மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் பிரதீப்ராஜா (22) என்பதும், இவா் முன்பகை காரணமாக பழிக்கு பழியாக ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரதீப்ராஜாவைக் கைது செய்தனா்.