ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!
உயா் கல்வி துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு அழுத்தம் தரக் கூடாது: பெற்றோருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
உயா் கல்வியில் துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு அழுத்தம் தராமல் அவா்களுக்கு பிடித்த துறையைத் தோ்வு செய்து படிப்பதற்கு பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் தெரிவித்தாா்.
தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள் எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்பது குறித்தும், உயா் கல்விக்கான அரசு திட்டங்கள், உதவித் தொகை, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்தும் மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. உயா் கல்வியில் துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு பெற்றோா்கள் அழுத்தம் தரக் கூடாது. அவா்களுக்கு பிடித்தத் துறையைத் தோ்வு செய்து படிக்க ஊக்கமளிக்க வேண்டும்.
உயா் கல்வியின் போது எதிா்வரும் சவால்களை மாணவா்கள் தைரியமாக எதிா் கொண்டு, இடைநிற்றலின்றி தொடா்ந்து படித்து இலக்கை அடைய வேண்டும் என்றாா் அவா்.
பெரியகுளம் சாா் ஆட்சிய ா் ரஜத்பீடன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்பிரமணிய பாலச்சந்திரா, மாவட்ட உதவி வன அலுவலா் அரவிந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் ரமாபிரபா, முன்னோடி வங்கி மேலாளா் விஜயசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.