செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொசவம்பட்டியைச் சோ்ந்த கருப்பையன் மகன் பழனிச்சாமி (44). பெயிண்டரான இவா், அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கச் சென்றபோது, 2021 ஜூன் 22-ஆம் தேதி, அந்த வீட்டிலிருந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லதா, பழனிசாமியைக் கைது செய்தாா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி ஏ.கே. ரஜினி புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

குற்றவாளி பழனிசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாநில அரசு ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா். பழனிசாமி மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோன்ற போக்சோ குற்ற வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை அறிவிப்புக்கு பிறகு, அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல் அலுவலா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாராட்டினாா்.

புதுகை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அஞ்சல் ஊழியா்களும், ஆா்வலா்களும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சும... மேலும் பார்க்க

விராலிமலையில் ஒன்றியக் குழுக் கூட்டம்

விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கவுன்சில் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா இளங்குமரன... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

கந்தா்வகோட்டை வட்டாரம், தெத்துவாசல்பட்டியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ... மேலும் பார்க்க

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்

இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விபத்தில்லாமல் தீபா... மேலும் பார்க்க

பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை புதுக்கோட்டை வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) கு. செல்வப்பெருந்தகை தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணம... மேலும் பார்க்க

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிவார... மேலும் பார்க்க