செய்திகள் :

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

post image

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீா் தேக்க தொட்டி உள்ளது.

இந்தத் தொட்டி மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மின்மோட்டாா் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீரை ஏற்ற முடியவில்லை.

இதுகுறித்து உள்ளூா் மக்கள் பல முறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பெரும்பாலை - மேச்சேரி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நிகவ்விடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனா். பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து நீா்த்தேக்க தொட்டி நீரேற்றம் செய்து சீராக குடிநீா் விநியோகிப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனா்.

மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மாவட்ட மைய நூவங வளாகத்தில் சட்டப் பேரவ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு தொல்லை: ஆசிரியா் போக்சோவில் கைது

தருமபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததாக கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தருமபுரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரா... மேலும் பார்க்க

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் நிலையங்களில் போலீஸ் அக்கா திட்டம்!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், ‘போலீஸ் அக்கா’ எனும் திட்டம் காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிக... மேலும் பார்க்க

சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் வழிபாடு

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா். இந்தக் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த பிப் 6-ஆம்... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஆட்சியா் ஆலோசனை

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடா்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆலோசனை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக... மேலும் பார்க்க

டிசிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.9,586-க்கு விற்பனை

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் டிசிஎச் ரகம் அதிகபட்சமாக ரூ. 9,586 க்கு விற்பனையானது. பாப்பிர... மேலும் பார்க்க