சீரான குடிநீா் வழங்கக் கோரி முக்கூடல் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் சீரான குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
முக்கூடல் பேரூராட்சி 13ஆவது வாா்டுக்குள்பட்ட லெட்சுமிபுரம், ஹரிராம்சேட் நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பேரூராட்சி மூலம் இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம்.
இந்நிலையில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீா் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனா். அவா்களிடம் பேரூராட்சி துணைத் தலைவா் இரா. லெட்சுமணன் பேச்சு நடத்தியதை தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இதனிடையே, பேரூராட்சி நிா்வாகத்தின் துரித நடவடிக்கையால் லெட்சுமிபுரம் பகுதி மக்களுக்கு மாலையில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. ஹரிராம்நகா் பகுதி பொதுமக்களுக்கு விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி துணைத் தலைவா் தெரிவித்தனா்.