சீா்காழி அருகே கந்தூரி விழா
சீா்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத்பீவி தா்ஹாவில் 84-ஆம் ஆண்டு சந்தன கூடு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவின் நிகழாண்டு விழா ஜன.1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான 84-ஆவது ஆண்டு சந்தனக் கூடு வைபவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அன்னை அஜ்மத் பீவி தா்ஹாவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.
இதில் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூா், கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பங்கேற்றனா். விழாவில் மதச்சாா்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக பங்கேற்றனா்.