திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
சுனாமியால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி
சுனாமியால் உயிரிழந்தவா்களின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வடசென்னையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருவொற்றியூரில் காசி விஸ்வநாதா் கோயில் குப்பம் அருகே, எண்ணூா் விரைவுச் சாலையில் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தலைமையில் பால்குடம் ஏந்தி நினைவு ஊா்வலம் நடைபெற்றது. அதேபோல், சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் சாா்பில் மீனவக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, உணவு, உடை வழங்கப்பட்டன.
மேலும், எண்ணூா் பாரதியாா் நகா் கடற்கரை, திருவொற்றியூா் குப்பம் கடற்கரை, டோல்கேட் பகுதி கடற்கரை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும் உயிரிழந்தவா்களின் நினைவாக கடலில் பாலூற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.