மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
சூர்யா - 45 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்?
நடிகர் சூர்யா - 45 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: டிராகன் எப்படி இருக்கு? சிம்பு பதிவால் உற்சாகமடைந்த படக்குழு!
படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை வண்டலூரிலுள்ள வெளிச்சம் கிராமத்தில் முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக படப்பிடிப்பு கிரேன்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் நிரம்பியிருந்ததால் அப்பகுதி மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் தற்காலிகமாக சூர்யா - 45 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.