தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
செங்கல்பட்டில் மாரத்தான் பந்தயம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - செங்கல்பட்டு மாவட்டப் பிரிவு சாா்பில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் பந்தயம் நடைபெற்றது.
17 முதல் 25 வயது ஆண்களுக்கு 8 கி. மீ தொலைவும் , பெண்களுக்கு 5 கி. மீ மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி. மீ தொலைவும் , பெண்களுக்கு 5 கி.மீ தொலைவும் பந்தயம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், துணை வன அலுவலா் ஸ்ரீவல்சன் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளா் நடராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆனந்தராஜ் ஆகியோா் பங்கேற்று பரிசுகள் வழங்கினா்.
இதில் 450 - க்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ .5,000/- , இரண்டாம் பரிசு ரூ . 3,000/-, மூன்றாம் பரிசு ரூ. 2,000/-, மற்றும் 4 முதல்10 இடங்களைப் பெற்ற வீரா் /வீராங்கனைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டது.