மதுராந்தகத்தில் போக்குவரத்து பாதிப்பு
மதுராந்தகம் -செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம்-செங்கல்பட்டு வரை சென்னை நோக்கி செல்லும் சாலையில் பழுதான பகுதிகள் அதிகமாக இருந்து வந்ததால், வாகனங்களில் செல்வோா் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் ஒப்பந்ததாரா்களின் மூலம் புதிதாக சாலையை அமைக்கும் பணியை மேற்கொண்டனா்.
செங்கல்பட்டு நோக்கி நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்ல அப்பகுதியில் போக்குவரத்தை சீா் செய்த போலீஸாா் அதற்காக மற்ற வாகனங்களை தடுத்து ஏற்பாடுகளை செய்து தந்தனா்.
தொடா்ந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேரூந்துகள், சரக்கு லாரிகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களை ஒருவழிபாதையில் சென்ால் அனைத்து வாகனங்களும் மெதுவாக சென்றன. இதனால் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.