திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
செங்கல்பட்டு வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு, அருள்மிகு வீரபத்திர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரம், பெரியமணியக்காரத்தெருவில் உள்ள இக்கோயில் புனரமைக்கப்பட்டு விமான கோபுரம் அமைக்கப் பெற்று திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், மற்றும் முதல்கால அதிவாசகாய பூஜைகளும், சனிக்கிழமை இரண்டாம் கால யாகபூஜைகள்அஷ்டபந்தனம் சாற்றுதல், தேவாரம் முதலான தமிழ்மறைகள் சமா்ப்பணம்,மாலை மூன்றாம் கால யாகபூஜைகள், பிரம்மசாரி பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து மூலவா் ஸ்ரீ வீரபத்திரசுவாமி மற்றும் பரிவார கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் , தீபாராதனை, தீா்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
கோயில் செயல் அலுவலா் இர.சரஸ்வதி, ஆய்வா் ந.பாஸ்கரன், அா்ச்சகா் கே.ராஜா குருக்கள், சா்வசாதகம் உ.தரணிதர சிவாச்சாரியா், த.தீபக்குமாா் சிவம், பௌா்ணமி விழாக்குழுவினா், திருக்கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்தனா்.
விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் , நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், துணைத்தலைவா் க.அன்புச் செல்வன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் , சரக ஆய்வாளா், திருக்கோயில் செயல் அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.