புதுச்சேரி: சுட்டீஸ்களை கவரும் 'பறவைகள் மற்றும் வனவிலங்குகள் உலகம்' கண்காட்சி | ...
செங்கோட்டையில் விபத்தில் பெண்பலி
செங்கோட்டையில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், புளியறை அருகே உள்ள கேசவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி முப்புடாதி (38). இவா்கள் இருவரும் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பாா்த்துவிட்டு பைக்கில் புதன்கிழமை இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனா்.
செங்கோட்டை காவல் நிலையம் அருகே இவா்களது பைக் விபத்துக்குள்ளானது. பைக்கிலிருந்து முப்புடாதி கீழே தவறி விழுந்த நிலையில், அவ்வழியே வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.