மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா். இதில் 28 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 38 பேருக்கு வரன்முறை பட்டாக்கள், 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதிய ஆணை உள்பட 99 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
முகாமில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், கரிவலம்வந்தநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் ஷேக்அயூப், வட்டாட்சியா் பரமசிவன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.