செய்திகள் :

செந்தில் பாலாஜி : `சாட்சியளிக்க வராமல் புறக்கணித்த விவரங்கள்' - ஆதாரத்தோடு ED வழங்கிய புதிய மனு

post image
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை பெற்றுத் தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார்கள் எழுந்தது. இதில் 'சட்டவிரோத பண பரிமாற்றத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டார்' என குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து. அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளை நடத்தி, அதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி கைதும் செய்தது.

Senthil Balaji - செந்தில் பாலாஜி

பின்னர், உச்ச நீதிமன்றத்தை நாடி,  471 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, அடுத்த நாளே அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது, செந்தில் பாலாஜியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

குறிப்பாக 'அவசர அவசரமாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? அவருக்கு எதிரான சாட்சியங்கள் அரசு அதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் இருக்கும் நிலையில் அமைச்சருக்கு எதிராக அவர்கள் எப்படி சாட்சியம் அளிக்க வருவார்கள்?' என கேள்வி எழுப்பியதோடு, "அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விரும்புகிறாரா... எனக் கேட்டு சொல்லுங்கள். ஆம் என்று அவர் பதிலளித்தால் அவருக்கு எதிரான வழக்குகளை நாங்கள் உடனடியாக பட்டியலிட்டு விசாரிப்போம்" என எச்சரித்தனர்.

அமலாக்கத்துறை

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை, அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்ததற்கு பிறகு எவ்வாறு நடந்தது? வழக்கில் சாட்சியங்களாக இருப்பவர்கள் சாட்சியளிக்க வராமல் புறக்கணித்தது போன்ற விவரங்களை, தேதி வாரியாக ஆதாரங்களாக சமர்ப்பித்திருக்கின்றனர். இதை முன்வைத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து கடும் ஆட்சியபனை தெரிவித்த நீதிபதிகள், வரும் மார்ச் 4-ம் தேதி இது தொடர்பான வழக்கினை விசாரிக்கும் போது அமலாக்கத் துறையின் இந்த புதிய மனுவையும் கவனத்தில் கொள்வார்கள் என்பதால், அன்றைய விசாரணை அதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? - சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர்.இந்நிலையில் அவர்களை விம... மேலும் பார்க்க

`நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா?' - ஆவேசமான பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பா... மேலும் பார்க்க