கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? - சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு தமிழ்நாடு அரசு அழைத்து வந்திருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வீரர் ஒருவர், “ 16,17,18 ஆம் தேதி வாரணாசியில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் சென்றிருந்தோம். அதேபோல கர்நாடக, கேரளா, ஆந்திராவில் இருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். 18 ஆம் தேதி போட்டி முடிந்தது. 20 ஆம் தேதி நாங்கள் ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தோம். நாங்கள் ரயில் ஏற சென்ற இடத்தில் அதிகளவில் கூட்டம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு 5 ஆயிரம் பேர் நின்றிருந்தார்கள்.

டிக்கெட் எடுக்காதவர்களும், முன்பதிவில்லா (Unreserved Ticket) ரயில் டிக்கெட் எடுத்தவர்களும்தான் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் மாற்றுதிறனாளிகள் எங்களை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் என்று அங்குள்ள காவல்துறையினரிடம் உதவி கேட்டோம். அவர்களுக்கு நாங்கள் பேசுவது புரியவில்லை. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன்பிறகுதான் சமூகவலைதளங்களில் வீடியோவை பதிவிட்டோம்.
இந்த தகவல் சொல்லி 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தமிழக அரசு தரப்பிலிருந்து அழைப்பு வந்தது. ஏழு மணிக்கு நாங்கள் உதவி கேட்டு ஒருவர் ஒருவராக தொடர்பு கொண்டு இருந்த நேரத்தில் 8 மணிக்கெல்லாம் தமிழ்நாடு அரசு சார்பில் எங்களிடம் பேசி விமானம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்தில் எங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து விட்டன.

எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விமான பயணம் குறித்து அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான விமான போக்குவரத்து வசதிக்கான உதவித்தொகை தமிழ்நாட்டில் வழங்கப்பட்டால் அது மொத்த நாட்டுக்குமான முன்மாதிரியாக இருக்கும். எங்கள் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs