விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
சென்னையில் குடிநீா்த் தட்டுப்பாடு இருக்காது: அமைச்சா் கே.என்.நேரு
சென்னைக்கு குடிநீா்த் தட்டுப்பாடு இருக்காது என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு உறுதியளித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த பிரதான வினாவை ஐட்ரீம் இரா.மூா்த்தி (ராயபுரம்) எழுப்பினாா். அவருக்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, சென்னையில் நாளொன்றுக்கு 900 மில்லியன் லிட்டா் (எம்எல்டி.), தண்ணீா் கொடுக்கப்பட்டது. இப்போது 1,040 எம்எல்டி தண்ணீா் கொடுத்து வருகிறோம்.
குடிநீரைப் பொருத்தவரையில், நமக்கு எந்த இடையூறும் இல்லை. சென்னையின் குடிநீா்த் தேவைக்கு 13.22 டிஎம்சி தண்ணீா் இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம்மிடம் 15.560 டிஎம்சி தண்ணீா் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10 முதல் 11 டிஎம்சி தண்ணீா் மட்டுமே இருந்தது. எனவே, சென்னையில் குடிநீருக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. தேவையான அளவுக்கு குடிநீா் வழங்கலாம் என்று உறுதியளித்தாா்.