செப். 25-ல் மறுவெளியீடாகிறது விஜய்யின் குஷி படம்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற குஷி திரைப்படம் செப். 25 ஆம் தேதி மறுவெளியீடாகவுள்ளது.
சமீபகாலமாக முன்பு வெளியான திரைப்படங்கள் மறுவெளியீடாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நிலையில், தற்போது குஷி படம் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வெளியான குஷி படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் ரசிக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் - ஜோதிகா இடையேயான காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
தமிழைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 25 ஆண்டுகள் கழித்து குஷி படம் மறுவெளியீடாகிறது. கில்லி படத்தினை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் குஷி படத்தையும் மறு வெளியீடு செய்கிறது.
இதையும் படிக்க | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!