``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு
ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீா் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு சனிக்கிழமை 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூா் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஏரிகள் நிரம்பி கடந்த சில தினங்களாக உபரி நீா் வெளியேறி வருகிறது.
இதனால், சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவும் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததால் வெள்ளிக்கிழமை காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டு பின்னா், 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழைவிட்டு இரண்டு நாள்களாகியும் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறையாததால், சனிக்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 22.70 அடியாகவும், கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 2,550 கனஅடியாகவும் உள்ளது.