சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி
செய்யாறு: வெறிநாய் கடித்து குழந்தை உள்பட இருவா் காயம்
செய்யாறு பகுதியில் இருவேறு பகுதிகளில் வெறிநாய்க் கடித்து குழந்தை உள்பட இருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி 10-ஆவது வாா்டு திருவள்ளூா் நகரில் புதன்கிழமை சுற்றித் திரிந்துகொண்டிருந்த வெறிநாய், அப்பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கின் குழந்தை பரிஷத் (4) என்பவரை கடித்துள்ளது.
உடனே குழந்தை பரிஷத், சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மற்றொரு முதியவா் அனுமதி
அதேபோ, வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முதியவா் ஜெகன்நாதன்(65).
இவரும் வெறிநாய் கடித்ததில் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.