சேதுபாவாசத்திரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி
சேதுபாவாசத்திரத்தில் வீட்டு வாசலில் சென்ற மழைநீர் வடிகால் வாய்க்கால் நீரில் மூழ்கி குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேதுபாவாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வசிப்பவர் மீனவர் வினோத்(32). இவரது மனைவி மோனிஷா( 28). இவர்களுக்கு ஹரிணி என்ற 3 வயது பெண் குழந்தையும், பிறந்து 18 மாதங்களேயான தர்னீஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். சனிக்கிழமை மதியம் மோனிஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக சேதுபாவாசத்திரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழைநீர் செல்வதற்காக இவர்களது வீட்டு வாசலில் வடிகால் வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. சமையல் செய்தபோது விளையாடிக் கொண்டிருந்த தர்னீஸ் வெளியில் சென்று மழை நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்ததில் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டான். சமையல் செய்துகொண்டிருந்த மோனிஷா குழந்தையை வீட்டில் காணாமல் வெளியே வந்து தேடியபோது வாய்க்காலில் மிதந்தது தெரியவந்தது.
ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி ஏற்கக்கூடாது: முன்னாள் பாக். வீரர்!
உடனடியாக குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.