செய்திகள் :

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி..! மனம் திறந்த ரோஹித் சர்மா!

post image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை சொந்த அணியிடம்கூட காண்பிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கின. இந்தியாவிற்கான போட்டிகள் துபையில் நடைபெறவிருக்கின்றன.

இந்தியாவின் முதல் போட்டி இன்று மதியம் தொடங்குகிறது. வங்கதேசத்துடன் விளையாடவிருக்கிறது.

இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் ஷமி, வருண் சக்கரவர்த்தி இருப்பது ஆறுதலாக இருக்கிறது.

ஒரேயொரு ஒருநாள் போட்டி மட்டுமே விளையாடியுள்ள வருண் லிஸ்ட் ஏ தொடரில் அசத்தியுள்ளார். 24 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

வலைப்பயிற்சியில் வருண் வித்தியாசமான பந்துகளை அதிகமாக வீசவில்லை. ஒரேமாதிரியான பந்துகளை மட்டுமே வீசினார். அநேகமாக எங்களிடம் கூட அவரது மாறுபட்ட பந்துகளை காண்பிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. ஆனால், அதுவும் நல்ல விஷயம்தான்.

வருண் சக்கரவர்த்தி

வருண் தனக்கென்று சில ஆயுதங்களை வைத்துள்ளார். அதை களத்தில் மட்டுமே உபயோகிக்க நினைக்கிறார். அவர் அப்படி செய்தால் அவரை விடவும் நான் மிகவும் மகிழ்வேன் என்றார்.

அவரிடம் ஏதோ புதியதாக இருக்கிறது. அதனால்தான் அவர் இங்கு அணியில் இருக்கிறார். கடந்த 8-9 மாதங்களாக சிறப்பாக பந்து வீசியுள்ளார். இந்தியாவுக்காக மிகப்பெரிய போட்டிகளில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கவே அவரை இங்குக் கூட்டி வந்துள்ளோம் எனக் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க

ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொட... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியின் சீருடையில் களமிறங்கவுள்ளனர்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 22... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க

விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 ... மேலும் பார்க்க