ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர ...
ஜன. 15- முதல் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்
சென்னை -நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்களில் வருகிற 15-ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை-நெல்லை-சென்னை வந்தே பாரத் (20666 / 20665) ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டுமென பயணிகள் விடுத்த கோரிக்கையின் பேரில், வருகிற 11-ஆம் தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில், மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன்படி, வருகிற 15-ஆம் தேதி முதல் சென்னை - நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.