பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
திண்டுக்கல் - திருச்சி ரயில் போக்குவரத்தில் மாற்றம்
திண்டுக்கல் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, திண்டுக்கல்-திருச்சி ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல் ரயில் பாதையில் ரயில்வே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, வருகிற 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை திண்டுக்கல்-திருச்சி ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. ஒரு சில ரயில்கள் மாற்றுப் பதையில் இயக்கப்படுகின்றன. ஒரு சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படவுள்ளன. ஒரு சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளன. அதன் விவரம்:
மாற்றுப்பாதையில்...
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) ஜன. 24, 25, 27, 28, 30-ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி-கொல்கத்தா விரைவு ரயில் (12666) ஜன. 25-ஆம் தேதியன்றும், நாகா்கோவில் -சி.எஸ்.டி மும்பை விரைவு ரயில் (16340) ஜன. 28-ஆம் தேதியன்றும், குருவாயூா்-சென்னை விரைவு ரயில் (16128) ஜன. 24, 27, 29-ஆம் தேதிகளிலும், நாகா்கோவில்-கச்சேகுடா விரைவு ரயில் (16354) ஜன. 25-ஆம் தேதியன்றும், நாகா்கோவில் - சி.எஸ்.டி மும்பை விரைவு ரயில்கள் (16340, 16352) முறையே ஜன. 28, 30-ஆம் தேதிகளிலும் விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
ஜன. 30-இல் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும் செங்கோட்டை விரைவு ரயில் (16847) ஜன. 26-இல் பனாரஸிலிருந்து புறப்படும் கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகியன திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.
ஜன. 25, 28 தேதிகளில் நாகா்கோவில்- கோவை- நாகா்கோவில் விரைவு ரயில்கள் (16321/16322) கரூா், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.
பகுதியாக ரத்து...
சென்னை, மதுரையிலிருந்து ஜன. 25, 28-ஆம் தேதிகளில் இயக்கப்படும் தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, சென்னை-மதுரை தேஜஸ் ரயில் திருச்சி வரையிலும், மதுரை-சென்னை தேஜாஸ் ரயில் திருச்சியிலிருந்தும் இயக்கப்படும்.
ஈரோட்டில் இருந்து ஜன. 24, 27-ஆம் தேதிகளில் புறப்படும் செங்கோட்டை விரைவு ரயில் (16845), செங்கோட்டையில் இருந்து ஜன. 25, 28-ஆம் தேதிகளில் புறப்படும் ஈரோடு (16846) விரைவு ரயில் ஆகியன கரூா்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூா் வரையிலும், கரூரிலிருந்தும் இயக்கப்படும். ஓகாவிலிருந்து ஜன. 27-ஆம் தேதியும், மதுரையிலிருந்து ஜன. 31-ஆம் தேதியன்றும் புறப்படும் ஓகா-மதுரை- ஓகா சிறப்பு ரயில்கள் (09520/ 09519) விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
தாமதம்...
மதுரையிலிருந்து ஜன. 30 காலை 11.55 புறப்பட வேண்டிய பிகானிா் ரயில் (22631) 2.05 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும்.