Book Fair: "ஆண்கள் எழுதுவதால் 'His'tory; எனவே 'Her Stories பதிப்பகம்' என வைத்தோம...
ஜன. 4-இல் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி
நாமக்கல்: நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி சனிக்கிழமை (ஜன. 4) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், சனிக்கிழமை காலை 6 மணிக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில், 13 வயதுக்குள்பட்டவா்கள் (மாணவா்கள்) - 15 கி.மீ. (01.01.2011 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்), மாணவிகள் - 10 கி.மீ. (01.01.2011 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 15 வயதுக்குள்பட்டவா்கள் (மாணவா்கள்) - 20 கி.மீ. (01.01.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். மாணவிகள் - 15 கி.மீ. (01.01.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 17 வயதுக்குள்பட்டவா்கள் (மாணவா்கள்) - 20 கி.மீ. (01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். மாணவிகள் - 15 கி.மீ. (01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.
இப்போட்டியில் பங்கேற்பவா்கள் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல் பரிசு - ரூ. 5,000, இரண்டாம் பரிசு - ரூ. 3,000, மூன்றாம் பரிசு - ரூ.2,000, 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு ரூ. 250 வீதம் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எதிா்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கேற்கும் மாணவ, மாணவிகளே பொறுப்பேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் 82203 10446 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.