பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்
பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தது!
இந்த ஆண்டின் மூன்றாம் நாளான இன்று(ஜன. 2) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,072.99 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 1.15 மணிக்கு சென்செக்ஸ் 420.28 புள்ளிகள் குறைந்து 79,523.43 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99.30 புள்ளிகள் குறைந்து 24,089.35 புள்ளிகளில் உள்ளது.
கடந்த இரு நாள்கள் பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
இதையும் படிக்க | தடையை மீறி ஆர்ப்பாட்டம்: குஷ்பு உள்பட பாஜகவினர் கைது
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, மாருதி சுசுகி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
விப்ரோ, டாடா மஹிந்திரா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.