டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
ஜன நாயகன் பிரமாதமாக வந்திருக்கிறது: தயாரிப்பாளர்
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில், படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான கேவிஎன் புரடக்ஷன் நிறுவனவர் சுப்ரித், “ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் பிரமாதமாக வந்திருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: முதல் பாகத்தைத் தாண்டியதா? தேசிங்கு ராஜா - 2 திரை விமர்சனம்!
We just Finished the film and it has come out brilliantly kvn producer suprith about vijay's jana nayagan