மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல...
ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
பழனியில் தைத் திருநாளை முன்னிட்டு, வருகிற 16-ஆம் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி பெரிய கலையமுத்தூா் கிராமத்தில் ஐகோா்ட் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வந்ததால், ஜல்லிக்கட்டுக் போட்டி நிறுத்தப்பட்டது. தற்போது, குடமுழுக்குப் பணிகள் நிறைவுற்ற நிலையில், நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வருகிற 16-ஆம் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்தது.
இதையடுத்து, விழாக் குழுவினா் போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனா்.