மணப்பாறை : `ரேஷன் கடை வேலை; எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி ரூ.6 லட்சம் பணம் வசூல் - எம...
பனைத் தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
பழனியில் பனைத் தொழிலாளா்களுக்கு மதுவிலக்கு போலீஸாா் ஆலோசனைகள், சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி சுற்றுப்புற பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான பனை மரங்களை வைத்து, பதநீா் இறக்கும் தொழிலில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுக்கு பழனி மதுவிலக்கு காவல் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அப்போது, பதநீா் இறக்கும் தொழிலுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள், உரிமம் பெற்றவா்கள் பின்பற்றும் வழிகள், விதிமுறைகளை மீறும் தொழிலாளா்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அனைத்துத் தொழிலாளா்களும் உரிமம் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் மதுவிலக்கு காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளா் லாவண்யா உள்ளிட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.