Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் போராட்டம்
பேரவைத் தோ்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சந்திரன், கிருஷ்ணமூா்த்தி, மாரப்பன், மாதப்பன், தங்கதுரை ஆகியோா் கூட்டாக தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு பொதுச் செயலாளா் அண்ணா குபேரன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் வாசுகி சிறப்புரை ஆற்றினாா்.
2003 ஏப்.1க்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.