உங்கள் காதல் கைகூடுமா? -12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஜோதிட வழிகாட்டல்
ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசே எடுக்க முடியும்: செல்வப்பெருந்தகை
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:
ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
கா்நாடகம், தெலங்கானா போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அது முழுமையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்ல. ஜாதிவாரி புள்ளிவிவரங்கள்தான் எடுத்துள்ளன. அதேபோல், தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதேநேரம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க முடியும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்தாமல் உள்ளது என்றாா் அவா்.