செய்திகள் :

‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!

post image

மலையாள திரையுலகின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பிரபலங்கள், மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் ஜூன் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள கே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா) எனும் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு ஜானகி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஜானகி என்பது சீதா தேவியின் மற்றொரு பெயர் என்பதால், அந்தப் பெயரை மாற்றும்படி மத்திய தணிக்கை வாரியம், அந்தப் படத்தின் தயாரிப்பளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து, மலையாள திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின், அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

இத்துடன், அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தாமதமாக்கப்படுவதை எதிர்த்து ஜே.எஸ்.கே. படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் அதன் முடிவை இன்றே தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தணிக்கை வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட ஜே.எஸ்.கே. திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று, எம்.பி. பத்மகுமார் இயக்கத்தில் உருவான “டோக்கன் நம்பர்” என்ற திரைப்படத்தில் வரும் ஜானகி எனும் கதாபாத்திரத்தின் பெயரானது, ஜெயந்தி என மாற்றப்பட்ட பின்னரே அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

The censor certificate be denied if it is named 'Janaki'. The Malayalam film industry is protesting.

இதையும் படிக்க:ஓடிடியில் மாமன் எப்போது?

30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாடுமுழுக்க நடக்கும் கதைகளில் ஒன்றுதான் படத்தின் கதை. நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 30 வயதைக் கடந்தும் த... மேலும் பார்க்க

தீபாவளிக்கு வெளியாகும் லெஜண்ட் சரவணனின் புதிய படம்!

பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லெஜண்ட் சரவணன், கதாநாயகனாக அறிமுகமான “தி லெஜண்ட்” என... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்? படக்குழுவுக்கு 40% இழப்பு!

பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் நடித்ததால் பஞ்சாபி சர்தார் ஜி 3 என்ற திரைப்படம் இந்தியாவில் வெளியாகாமல் வெளிநாட்டில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. அமர் ஹுண்டல் இயக்கிய இந்தப் படத்தில் பஞ்சாபி நடிகர் தில்ஜ... மேலும் பார்க்க

கோலிவுட் சூப்பர்ஸ்டாருடன்.. நடிகர் விஜயுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை சிங்கப்பூரின் உயர் ஆணையர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் ... மேலும் பார்க்க