கோலிவுட் சூப்பர்ஸ்டாருடன்.. நடிகர் விஜயுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை சிங்கப்பூரின் உயர் ஆணையர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து, அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.
மேலும், கோலிவுட் சூப்பர்ஸ்டாரை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வியும் எழுப்பி பதிவிட்டுள்ளனர்.
A pleasure to meet Kollywood superstar #Thalapathy@actorvijay this afternoon. What is your favourite Tamil movie that he has starred in? - CG Pang pic.twitter.com/YNH153zATf
— Singapore in India (@SGinIndia) June 27, 2025
மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது இருந்தாலும், அரசியல் விமர்சகர்களிடையே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.