உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்...
திருச்செங்கோடு வேளாண் சங்கத்தில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு 54 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தன. இதில், முதல்தரம் ரூ. 215.75 முதல் ரூ. 255.75 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 198 முதல் ரூ. 200.10 வரையிலும் விலைபோனது. மொத்தம் ரூ. 4.58 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற ஏலத்துக்கு 51 மூட்டைகள் வரத்து இருந்தன. இதில், முதல்தரம் ரூ. 230.10 முதல் ரூ. 255.85 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 198 முதல் ரூ. 204 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 4.75 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.