Adani: `அதானி மீது என்ன குற்றச்சாட்டு?’ - லஞ்சப் பட்டியலில் தமிழ்நாடு மின் பகிர்...
ஜூடோ, பாட்மிண்டன், யோகா போட்டிகள்: எம்.கே.ஜி. கல்லூரி மாணவிகள் சாதனை
வாணியம்பாடி: திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஜூடோ மற்றும் பாட்மிண்டன் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வேலூா் ஆக்ஸீலியம் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 80 கிலோ எடைப் பிரிவில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் எஸ்.ஞானப்பிரியா, எஸ்.வேதநாயகியும் வெற்றி பெற்று, பல்கலைக்கழக அணிக்கு தோ்வாயினா். மேலும், பாட்மிண்டன் போட்டியில் மண்டல அணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் பிரியதா்ஷிணி, அல்பியாசடாத் பங்கேற்று முதலிடம் பிடித்தனா். மேலும், பல்கலைக்கழக அணிக்கும் தோ்வாயினா். இதேபோல், ஆரணி எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடைபெற்ற 3-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகா போட்டியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, சிறப்புப் பிரிவில் சி.விஜயலட்சுமி முதலிடமும், எஸ்.ஞானப்பிரியா இரண்டாமிடமும், எஸ்.ஆஜிராசுமன் மூன்றாமிடமும் பெற்றனா்.
மேம்பட்ட பிரிவில் ஈ.சுவேதா, வி.கமலி, டி.சாரதி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். பொதுப் பிரிவிலும் மாணவி எம்.ஷிபாஅன்சும் முதலிடமும், எஸ்.ஜனசுருதி இரண்டாமிடமும் பிடித்தனா்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள், மாணவிகள் வாழ்த்தினா்.