சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்: புதுவை மு...
ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ.48,537 கோடிக்கு அரிசி கடத்தல்: ஆந்திர அமைச்சா் குற்றச்சாட்டு
ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ.48,537 கோடி மதிப்பிலான அரிசி கடத்தப்பட்டதாக மாநில உணவுத் துறை அமைச்சா் மனோகா் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஜெகன்மோகன் ஆட்சியில் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகம் கடத்தல் குகையாக மாற்றப்பட்டது.
அந்தத் துறைமுகம் வழியாக கடந்த 3 நிதியாண்டுகளில் 1.3 கோடி டன்னுக்கும் அதிகமான அரிசி கடத்தப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.48,537 கோடி. அரிசி கடத்தல் மூலம் லாபமடைய சித்தூா் முதல் ஸ்ரீகாகுளம் வரை, குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அளவுக்கு வேறு எந்தத் துறைமுகத்தில் இருந்தும் அரிசி ஏற்றுமதி செய்யப்படவில்லை. அந்தத் துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி கடத்தப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு ஆவன செய்து வருகிறது’ என்றாா்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி உடனடியாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.