Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
டிஆர்பியில் முதல் முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!
சிறகடிக்க ஆசை தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர் முதல்முறையாக டிஆர்பி புள்ளிகளில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்தவகையில், தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 9.28 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று முடிச்சு தொடர் 9.05 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கயல் தொடர் 8.51 டிஆர்பி புள்ளிகளுடனும் மூன்றாம் இடத்தில் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 7.93 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மருமகள் தொடர் 7.91 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் தொடர் 7.20 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. அன்னம் தொடர் 7.04 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.
அய்யனார் துணை தொடர் 6.62 டிஆர்பி புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும் பாண்டியன் ஸ்டோர் தொடர் 6.25 டிஆர்பி புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளது.
சின்ன மருமகள் தொடர் 5.53 டிஆர்பி புள்ளிகளுடன் பத்தாம் இடத்தில் உள்ளது.
வாரந்தோறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 4 இடங்களைப் பிடித்து வந்த நிலையில், முதல்முறையாக விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிக்க: மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!