செய்திகள் :

டிரம்ப் பதவியேற்பு விழா அழைப்பிதழ் பெற அமெரிக்கா சென்ற ஜெய்சங்கர்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

post image

டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் பெற பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிச.24-29 வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெய்சங்கர், அந்நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமரிசித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அமரிக்காவுக்கு அனுப்பி, தனக்கு, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழைப் பெற்று வருமாறும், இல்லாவிட்டால் உங்கள் வேலை பறிபோகும் என்று கூறியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.

ஆனால், இதுவரை, டொனால்ட் டிரம்ப்புக்கு மோடியை அழைப்பதற்கான எண்ணம் ஏற்படவில்லை என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்கு இடையே, இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, திங்கள்கிழமை, அமெரிக்க அதிகாரிகளுடன் இருதரப்பு உறவு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

மும்பையில் சோட்டா ராஜனின் உதவியாளர் கைது

32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனின் உதவியாளரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் உதவியாளர் ராஜு விகன்யா என்கிற விலாஸ் பல்ராம் பவார். இவர் மீது மும்பையில் ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடி வீட்டில் கன்றுக்குட்டி: ஆர்டிஐ-ன் கீழ் பதில் அளிக்க மறுப்பு!

புது தில்லி: 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கன்றுக்குட்டியுடன் பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது தனிப்பட்ட நபரின் தகவல்... மேலும் பார்க்க

கணவரை கொன்று உடலை 2 துண்டுகளாக வெட்டிய மனைவி!

கர்நாடகத்தில் குடிபோதையில் இருந்த கணவரைக் கொன்று உடலை 2 துண்டுகளாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலம் ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிர மாடல் அச்சத்தால்.. அணி மாறுவாரா நிதீஷ் குமார்?

மகாராஷ்டிரத்தைப் போல, பேரவைத் தேர்தலில், பாஜக தலைவரை முதல்வராக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அணி மாறிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்குக் காரணம், இந்தியா கூட்டணியி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஓட்டுநர்: ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்!

பெங்களூருவில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் வழிமாறிச் சென்றதால் பெண் பயணி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மீது பெங்களூரு காவல்துறையில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் பு... மேலும் பார்க்க

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கர்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (ஜன. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை மு... மேலும் பார்க்க