பேருந்து - கார் மோதல்: சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் பலி!
ரோஹித் சர்மாவின் முடிவு குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவு குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பேசியுள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்திய அணியை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்துகிறார்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவுக்கும் கௌதம் கம்பீருக்கும் என்ன பிரச்னை? இந்திய அணியில் என்ன நடக்கிறது?
ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த் கூறியதென்ன?
சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இருவரும் அவரது இந்த முடிவு குறித்து பேசியுள்ளனர்.
ரோஹித் சர்மா குறித்து டாஸ் சுண்டுகையில் ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: எங்களது கேப்டன் அவரது தலைமைப் பண்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு அணியில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது என்றார்.
ரோஹித் சர்மாவின் முடிவு குறித்து ரிஷப் பந்த் பேசியதாவது: இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ரோஹித் சர்மா எங்களுடைய கேப்டன். ஆனால், இது அணி நிர்வாகத்தின் முடிவு. அணி நிர்வாகத்தின் இந்த முடிவில் ரோஹித் சர்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது முடிவு குறித்து இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.
இதையும் படிக்க: பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல்..! இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!
கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.