மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
பொங்கல் பரிசுத் தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்
பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதலவர் ஸ்டாலின் அறிவித்தார்
இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,77,575 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 983 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10,78,558 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழக்கப்பட உள்ளது.
பொங்கள் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகை சிரமம் இன்றி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தெரிவித்தார்.
தொடர்ந்து வீடு வீடாக சென்று குடும்ப அட்டையை பெற்று ஆய்வு செய்து அதற்கான டோக்கனையும் அவர் நேரடியாக வழங்கினார். இதேபோல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் பணி இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.