செய்திகள் :

சிட்னி டெஸ்டில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய கவாஜா! ஏன்?

post image

சிட்னி டெஸ்டில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா கறுப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 5-வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 40 ரன்கள் விளாசினார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். பார்டர்- கவாஸ்கர் தொடரில் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள உஸ்மான் கவாஜா 143 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க |இதுமாதிரி அடி வாங்கியதில்லை..! ரிஷப் பந்த் பேட்டி!

போட்டியின் போது உஸ்மான் கவாஜா மட்டும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களைத் தவிர்த்து தனது வலது கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினார். ஒருவரின் இறப்பு அல்லது துக்க நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கறுப்புப் பட்டை அணிந்தது குறித்து உஸ்மான் கவாஜா விளக்கமளித்துள்ளார்.

அதில், கவாஜாவும், தென்னாப்பிரிக்க வீரரும், கவாஜாவின் நண்பருமான ஆஸ்வெல் பிரின்ஸும் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் லாங்ஷைர் அணிக்காக 2014 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகின்றனர். அப்போது இருவரும் நட்பாக பழகிவந்தனர். அவரின் மனைவி மெலிசாவும் கவாஜாவுடன் நட்பாக பழகிவந்துள்ளார்.

இதையும் படிக்க |பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல்..! இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

பிரின்ஸின் மனைவி மெலிசா பிரின்ஸ்(40) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்தப் போட்டியில் “அனைத்து உயிர்களும் சமம்” என தனது காலணியில் பதிவிட்டு, கையில் கறுப்பு பட்டையுடன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் கவாஜா.

சிட்னியில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியும் பிங்க் டெஸ்ட்டாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த டெஸ்ட் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பிஜிடி தொடரில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் பதில்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் டெஸ்ட் போட்டி எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ... மேலும் பார்க்க

மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முக்கியமான தருணத்தில் விளையாட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் ... மேலும் பார்க்க

பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையி... மேலும் பார்க்க

ஒருவர் இரட்டை சதம், இருவர் சதம் விளாசல்; தென்னாப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!

பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-ன் அடுத... மேலும் பார்க்க

முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவா... மேலும் பார்க்க