மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
டிராகன் எப்படி இருக்கு? சிம்பு பதிவால் உற்சாகமடைந்த படக்குழு!
நடிகர் சிம்பு டிராகன் திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நாளை (பிப். 21) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லவ் டுடே திரைப்படத்திற்குப் பின் பிரதீப் நடிக்கும் படமென்பதால் ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளதுடன் படத்திற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த நிலையில், நடிகர் சிம்பு தன் எக்ஸ் பக்கத்தில், “டிராகன் - பிளாக்பஸ்டர்” என ஒரே வரியில் தன் விமர்சனத்தைப் பதிவிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

இப்பதிவை படத்தின் இயக்குநர் உள்பட படக்குழுவினர் பகிர்ந்து தங்களின் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
சிம்புவின் 51-வது படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.