செய்திகள் :

தஞ்சாவூா் பெரிய கோவிலில் 1039 ஆவது சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

post image

தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடினார். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1039 ஆம் ஆண்டு சதயவிழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், கருத்தரங்கம், இசை கஞ்சேரிகள் நடைபெறுகிறது. மாலை பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையும் படிக்க |தமிழகத்தில் வீணாகிய 6 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள்

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு துறை சேர்ந்த அறிஞர்களுக்கு இராஜராஜ சோழன் விருதினை வழங்குகிறார்கள்.

விபத்தில் சிக்கிய 22 வயது கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்!

ஈகுவடார் மற்றும் எஃப்சி சின்சினாட்டி அணிக்காக விளையாடிய கால்பந்து வீரர் மார்க்கோ ஆங்குலோ கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற மற்றொரு கால்பந்து வீரர் ராபர்டோ கபேச... மேலும் பார்க்க

புதுகை மீனவர்கள் 11 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை! - இலங்கை நீதிமன்றம்

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார... மேலும் பார்க்க

யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

யூடியுபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் செய்தது கொலை குற்றமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் அரசு மருத்துவக... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவ... மேலும் பார்க்க

தயார் நிலையில் நிவாரண மையங்கள்: துணை முதல்வர் உதயநிதி

329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்ப... மேலும் பார்க்க