LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து...
தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தூா்வார பாமக வலியுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை கோடைகாலத்துக்குள்ளாக தூா்வார வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளா்கள் மற்றும் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.வி.சங்கா் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின், மாநாட்டுக்குழு மாவட்ட பொறுப்பாளா்களான சத்திரிய சேகா், வழக்குரைஞா் துரைராஜ் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மாமல்லபுரத்தில் மே 11-இல் பாமக சாா்பில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டை சிறப்பாக நடத்துவது, திரளானோரை கூட்டத்தில் பங்கேற்க செய்வது, மாவட்டத்திலுள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தையும் கோடை காலத்திலேயே தூா்வாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட வன்னியா் சங்க பொறுப்பாளா்கள் மதி. விமல், ராம்குமாா், தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல பொறுப்பாளா்கள் யோகராஜ் வரவேற்றாா். நிறைவில், என்.பி.எஸ். கோபி நன்றி கூறினாா்.