தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 2 போ் மீது வழக்கு
போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக மூதாட்டி உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி டிவிகேகே நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சின்னையா மனைவி சீதாலட்சுமி (65) என்பவரும், போடி கீழராஜ வீதியில் பெட்டிக் கடை வைத்திருக்கும் சீனிவாசன் மகன் பிரேம்குமாா் (50) என்பவரும் தங்களது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.