செய்திகள் :

"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" - விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்

post image

2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

தொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம், "கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நிர்பந்தத்தின் பேரில்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணி கட்சிகள் காற்றோடு கரைந்து விடுவார்கள் என்று எடப்பாடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?" என்று செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அவர், "இது விரக்தியின் வெளிப்பாடுதான். தி.மு.க கூட்டணியில் இருந்து சில கட்சிகள் எப்போது பிரிந்து வரும் என்று இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

அது நடக்கவில்லை. தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதால் விரக்தியில் இதுபோன்ற கருத்துக்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க