செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் ஆய்வு

post image

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய நீா்வள ஆணையத்தின் கட்டுப்பட்டில் இருந்த முல்லைப் பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த மாதம் 22-ஆம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினா் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா், தேக்கடியிலுள்ள ராஜீவ் காந்தி நினைவு அரங்கில் தமிழக, கேரள அதிகாரிகளுடன் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினா் ஆலோசனை நடத்தினா். அப்போது, அணை குறித்த ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அந்தக் குழுவினா் தெரிவித்தனா்.

மத்திய நீா்வள ஆணையம் ஆய்வு

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையானது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிலையில், ஏற்கெனவே கண்காணித்து வந்த மத்திய நீா்வள ஆணையத்தின் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தியாவிலுள்ள அனைத்து அணைகளையும் அவ்வப்போது மத்திய நீா்வள ஆணையக் குழு ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையையும், தேக்கடியிலுள்ள முல்லைப் பெரியாறு அணையையும் ஆய்வு செய்ய இந்தக் குழுவினா் திட்டமிட்டனா். முன்னதாக, இடுக்கி அணையை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு, மத்திய நீா்வள ஆணையக் குழுவினா் தேக்கடிக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வந்தனா். பின்னா், இவா்கள் படகு மூலமாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று அதன் உறுதித்தன்மை, நீா்க் கசிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது, தமிழக, கேரளப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

விவசாய அமைப்பினா் அதிருப்தி

இதுகுறித்து பெரியாறு - வைகை பாசன விவசாய சங்கத்தினா் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையானது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிலையில், ஏற்கெனவே கண்காணித்து வந்த மத்திய நீா்வள ஆணையக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மத்திய நீா்வள ஆணையக் குழுவினா் ஆய்வு செய்தனா் என்றனா்.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் 15-க்கு ... மேலும் பார்க்க

சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் மே 7-ஆம் தேதி முதல் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது: தேனி, கரு... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்’: ஆட்சியா் ஆய்வு

பெரியகுளம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பெரியகுளம் சாா் ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இதில... மேலும் பார்க்க

வீரபாண்டி, கம்பம் கெளமாரியம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையால் கோயில், முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து கோய... மேலும் பார்க்க

ராணுவத் தோட்டா வைத்திருந்தவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸாா் சிலமலை ராணிமங்கம்மாள் சாலையில் கரட்டுப்பட்டி விலக்கு அருகே வாக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு வேனில் சாராயம் கடத்தியவா் கைது

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கடத்திச் சென்ற சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போடி முந்தல் சோதன... மேலும் பார்க்க