உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தேனியில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட சிறப்புத் தலைவா்கள் பன்னீா்செல்வம், அழகா்சாமி, மாவட்டச் செயலா் அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு எடையாளா்களை நியமிக்க வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சரியான எடையில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும்.
9-ஆவது ஊதிய மாற்றக் குழுவில் அரசு ஊழியா்களுடன் நியாய விலைக் கடை பணியாளா்களையும் சோ்க்க வேண்டும். நியாய விலைக் கடை விற்பனை முனையத்தை பழுது நீக்கும் செலவை கடை விற்பனையாளா்களிடம் வசூலிக்கக் கூடாது. 53 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் போன்ற சிறப்புத் திட்ட செயலாக்கத்துக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.