உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில்...
NEET : `பழங்குடி, பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி' - சொல்கிறார் எல்.முருகன்
இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தந்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மூத்த காங்கிரஸ் அரசியல்வாதியும் பா.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

தொடர்ந்து நீட் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், " தமிழக மக்களை குழப்பத்திலும் திசைத்திருப்புவதிலும் குறியாக இருக்கிறது தி.மு.க அரசு. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க - வும் இணைந்து தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த ஆ. ராசா முதல் டி.ஆர் பாலு வரை யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.
திசைத்திருப்புவதற்கான செயல்..!
இன்றைக்கு நீட்டை எதிர்ப்பதாகச் சொல்லி நாடகமாகடி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு மாணவர்களை நாடு முழுவதும் தற்போது தயார் செய்து வருகிறோம். அரசு பள்ளிகளில் பயின்று வரும் பழங்குடியின மற்றும் பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்த சமயத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற பெயரில் போலியான நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசைத்திருப்புவதற்கான செயலாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது" என்றார்.